Tuesday 22 January 2013

ரஷ்ய Orthodox திருச்சபையின் Epiphany


ரஷ்யாவில் பரவியிருக்கும் Orthodox சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், ஜனவரி 19ஆம் தேதி, உறைந்த நீரில் குதித்து Epiphanyயை கொண்டாடினார்கள்.
இயேசுநாதர், ஜோர்டன் நதியில் திருமுழுக்கு வைபவத்தை நிறைவேற்றிய நாளை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி 19ஆம் தேதி இதைச் செய்கிறார்கள்.  இந்நாளில், புனித நீராடுவதனால், தங்கள் பாவங்கள் கழுவப்படும் என்பது மக்களின் நம்பிக்கை.

ரஷ்யா இப்பொழுது குளிர் காலத்தின் மத்தியில் இருக்கிறது.  பாரம்பரிய முறைப்படி மக்கள் புனித நீராடுவதற்காக, மாஸ்கோவில் இருக்கும் ஒரு உறைந்த ஏரியில், ஓட்டை ஏற்படுத்தப்பட்டு, பாதிரியார்களால் அந்த நீர் புனிதபடுத்தப்பட்டது.
சிலுவை தொங்கும் வெள்ளை உடை அணிந்திருந்த ஒருவர், “எனக்கு குளிர் தெரியலை” என்று coolஆக சொல்லி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்.  சிலர், குளிர்ந்த நீரில் நீராடுவது உடலுக்கு நல்லது என்ற நம்பிக்கையோடு நீரில் இறங்கினார்கள்.
மைனஸ் 13 டிகிரி செல்ஷியஸ் நீரில் குதித்த ஒருவர், “உள்ள போகும்போதுதான் குளிரா இருந்துச்சு. வெளிய வரும்போது இதமா இருக்கு.  தண்ணி சூடாத்தான் இருக்கும் போல” என்கிறார்.

மாஸ்கோவில் இப்படியிருக்க, St.Petersburg நகரத்தில், ஒரு கூட்ட மக்கள், ஐஸ் தண்ணீரில் நீந்திய அதிகபட்ச மக்கள் என்ற சாதனையை படைக்க தயாராகிவிட்டனர்!
சிலுவை போன்று வெட்டப்பட்டிருந்த துவாரத்தின் வழியாக ஒவ்வொருவராகக் குதித்தனர்.  அந்த நாள் முழுவதும் நீரில் குதிப்பவர்களை cameraவில் பதிவு செய்து சாதனையை அங்கிகரிக்கும் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த காட்சி, பனி பிரதேச பிராணிகளின் செய்கை போல காட்சியளிப்பதால், குளிர் காலத்தில் இதுபோன்று செய்கிறவர்களுக்கு Walrus அல்லது மோர்ழி என்கிற பெயரும் உண்டாம்!                         <^:-:^>

SMS வேண்டுதல்!


தொழில்நுட்பம் இறையாண்மைக்கு எதிரானது என்று வாதிட்டவர்கள் உண்டு.  ஆனால், இப்பொழுது, பக்தியிலும் தொழில்நுட்பம் கலந்துவிட்டது!  அமெரிக்காவில், Franciscan அமைப்பைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார்கள், SMS மூலமாக வரும் பிரார்த்தனைக்கான விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

அமெரிக்காவில், ‘Prayer’ என்று type செய்து 30644 என்ற இலவச எண்ணுக்கு அனுப்பினால், அவர்கள் ஒரு linkஐ பதிலாக அனுப்புவார்கள். அதை click செய்து, திரையில் வரும் boxஸில் உங்கள் வேண்டுதலை பதிவு செய்யலாம்.  ஒவ்வொரு நாளும் தேவாலயத்தில் நடக்கும் பூசைகளில் இந்த விண்ணப்பங்களை சொல்லி ஜெபம் செய்வார்கள்.
இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தீராத வியாதியில் சிக்கி மரணத்தோடு போராடிக்கொண்டு இருக்கிறவர்கள் இடமிருந்தும், தங்கள் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லத்தில் வாழும் பெரியவர்களிடம் இருந்தும் மனதை வாட்டும் விண்ணப்பங்கள் வருகிறதாம்.

இந்த ஐடியா தோன்றிய விதம் சுவாரஸ்யமானது.  தலைமை பாதிரியார் பிரசங்கம் செய்துகொண்டிருக்கும்போது எதிரில் அமர்ந்திருப்பவர்கள், mobileஐ கையில் மறைத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது வரும் SMSகளுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருப்பார்களாம்.  அதை பார்த்துதான் அவருக்கு இந்த ஐடியா தோன்றியதாம்!

Monday 21 January 2013

ஐந்தரை கிலோ தங்கக்கட்டி!


கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சுகிட்டு கொடுக்கும்னு சொல்றது நமக்கு உண்மையோ இல்லையோ, ஒரு ஆஸ்ட்ரேல்ய வியாபாரியை பொறுத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை. ஒரே நாள்-ல ஒரு வியாபார் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாமா?
ஆஸ்ட்ரேல்ய நாட்டின் விக்டோரியா மாநிலத்தில், Ballarat என்கிற நகரத்தில், தங்கம் பிரித்தெடுக்கும் தொழில் செய்பவர் ஒருவருக்கு, ஒரேயடியாக ஐந்தரை கிலோ தங்கக்கட்டி ஒன்று கிடைத்திருக்கிறது!  தன்னுடைய அடையாளத்தை வெளியிட விரும்பாத அவர், தங்க வியாபாரம் செய்யும் தன்னுடைய நண்பர் மூலம் அதை விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளார்.

தரைக்கு அடியில் 60 சென்டிமீட்டர்கள், கிட்டதட்ட இரண்டு அடி ஆழத்தில் இருந்த கட்டியை, மிக நவீனமான Minelab GPX-5000 என்கிற கருவி காட்டி கொடுத்துள்ளது.

குறைந்த பட்சம் இரண்டு லட்சத்து 80 ஆயிரம் ஆஸ்ட்ரேல்ய டாலர்கள் விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிற தங்கக்கட்டி, இப்பொழுது அந்த வியாபாரியின் மனைவி, குழந்தைகளை உற்சாகத்தில் துள்ளி குதிக்கச் செய்திருக்கிறது!

அரிசி அரசியல்!

நமது அண்டை நாடான சீனா, எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறது.  தொழில் துறை, வணிகம், வர்த்தகம் என்று பொருளாதார முன்னேற்றத்தோடு, கலை துறையிலயும் நல்ல முன்னேற்றங்கள பார்க்க முடிகிறது.
இன்னும் கம்யூனிஸ ஆட்சிக்குக் கீழ இருக்கும் சீனா, முதல் மாதிரி இரும்புத் திரை நாடாக இல்லாமல், அங்க நடக்கிற விஷயங்கள் எல்லாம் வெளியே தெரியுது.  'கல்லிலே கலைவண்ணம் கண்டான்' என்கிற பாட்டு போல இங்கே அரிசியில் தன் தலைவரை காண்கிறார் இந்த ஓவியர்! அதாவது அரிசி அரசியல்!
சிறிய பொருட்களில் நுட்பமான கலை படைப்புகளை உருவாக்கும் தைவான் நாட்டு கலைஞர் ஒருவர், சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் க்ஸி ஜின்பிங் (Xi Jinping) உடைய உருவத்தை அரிசியின் மீது வரைந்துள்ளார். 
தன்னுடைய இந்த முயற்சி குறித்து பேசிய சென் ஃபார்ங்-ஷியன் (Chen Forng-Shean) “சீனாவின் ஜனத்தொகை 140 கோடிக்கும் மேல். இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தின் தலைவரை உலகமே உற்று நோக்கும். ஒரு கலைஞனாக, அரசியல் தலைவர்களின் படத்தை வரைவது, ஒரு சரித்திரத்தை பதிவு செய்வது போன்றது.” என்று பெருமிதத்துடன் கூறினார்.
க்ஸி ஜின்பிங் கையசைத்துக் கொண்டிருப்பது போல் வரையபட்டிருக்கும் அரிசி ஓவியத்திற்கு அருகில், “முழு மனதுடன் மக்கள் சேவை செய்யுங்கள் - சீன கம்யூனிஸ கட்சி பொது செயலாளர் க்ஸி ஜின்பிங்" என்று சீன மொழியில் எழுதியிருக்கிறது.
சென் இதுபோல் பல சிறு ஓவியங்கள் வரைந்திருக்கிறார். முன்னாள் கம்யூனிஸ கட்சி தலைவர்கள் மாவோ செதாங், ஹூ ஜின்டாவோ ஆகியோரும் இதில் அடக்கம்.